Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 டிசெம்பர் 15 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம், சாமிவேல் சுதர்ஷினி
பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப் -பட்டுள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்துக்கும், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை, தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ஏற்கெனவே முன்வைத்த 620 ரூபாய் சம்பளக் கோரிக்கையிலேயே முதாலாளிமார் சம்மேளனம் விடாப்பிடியாக இருந்தது என்றும், அடிப்படைச் சம்பளத்தில் ஒரு சதத்தையேனும் அதிகரிப்பதற்கு ஒத்துவரவில்லை என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டினர்.
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில், தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, தொழில்திணைக்களத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில், 'பெருந்தோட்டத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை 5 சதத்திலாவது அதிகரித்துக் கொடுப்பதற்குக் கூட, முதலாளிமார் சம்மேளம் இணக்கம் தெரிவிக்கவில்லை.
தற்போது, பெருந்தோட்டத்துறையின் உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளமையும் தோட்டத்துறையின் வருமானம் மிகவும் தாழ்ந்த மடத்தில் இருப்பதனாலுமே, முதலாளிமார் சம்மேளம் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை' என்று இவர் இதன்போது குறிப்பிட்டார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago