2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

'சத்தம் கேட்டால் கடும் நடவடிக்கை'

Niroshini   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுயாதீன ஆணைக்குழுக்களுக்களின் பணிப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனை மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை (21), நடைபெற்ற போது, எம்.பி.மார்களில் சிலர், நடந்துகொண்ட முறை குறித்து, சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்று வியாழக்கிழமை (22), தனது அதிருப்தியை வெளியிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனிமேல் இவ்வாறாக நடந்துகொள்வார்களாயின், ​அவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், சபாநாயகர் நேற்று சபை அமர்வின் ஆரம்பத்தின் போது தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய சபாநாயகர்,

“நாடாளுமன்றத்துக்குள், எம்.பி.க்கள், ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு, நிலையியற்கட்டளைக்கு எதிராகச் செயற்பட வேண்​டாமென, மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அத்துடன், “நேற்று (புதன்கிழமை), சில பல சம்பவங்கள், அவைக்குள் இடம்பெற்றன. ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்களது குரல்களை எழுப்பியவாறு, ஒழுக்கயீனமாக நடந்துகொண்டனர்.

இது, நாட்டின் அனைத்து மக்களினதும் அவதானத்தை ஈர்த்துள்ளதுடன், கடுமையான அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளது. இனிவரும் காலங்களில், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என சபாநாயகர், மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .