2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சு.க எம்.பி.க்கள் தனித்துப் பேச்சு

Kogilavani   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனித்து மேதின ஊர்வலமொன்றை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானமொன்றை எட்டுவதற்காக, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, இவ்வாரத்தில் கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டு எதிரணியின் கொள்கை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நடைமுறை நடைமுறைச் செயற்றிட்டங்கள் தொடர்பில், இந்தக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்படும் என்று சு.க.வின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தாங்கள் தனித்து மேதின ஊர்வலமொன்றை நடத்தப்போவதாக, கூட்டு எதிரணியினர் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், சு.க.வின் மேதின ஊர்வல ஏற்பாட்டுக் குழுவில், கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சிலவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம், இம்முறை காலியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .