Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 நவம்பர் 19 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அது தொடர்பில் அவர், நேற்று வியாழக்கிழமை ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
'குறிப்பாக தமிழ் மக்களின் போராட்டம், அவர்களின் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்த வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை கடுகளவும்அறியாத, கொழும்பில் சுகபோகவாழ்க்கை நடத்திய சுமந்திரனின் நடவடிக்கை, அவரின் பச்சோந்தித் தனத்தை எடுத்துக் காட்டுகின்றது. எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராகத் தமிழர் விடுதலைக் கூட்டணியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக வாதாடி அதில் படுதோல்வியடைந்ததைத் தவிர சுமந்திரன் வேறு எதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ, அல்லது தமிழ் மக்களுக்கோ செய்யவில்லை.
கடந்தகாலத்தில், வேலைவெட்டி இல்லாத இளைஞர்கள்தான் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் எனவும், இராணுவத்தைவிட தமிழீழ விடுதலைப் புலிகள்தான் அதிகளவு தமிழ் மக்களை கொலை செய்தார்கள் என்றும் அதற்காக, விடுதலைப் புலிகளையும் விசாரணை செய்யவேண்டுமென்றும் கூறியவர். அப்போதே அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் இன்று இவ்வாறு செயற்பட்டிருக்கமாட்டார். ஆனால், அவரை கட்சியின் தலைமை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினருக்காக போட்டியிட வைத்தது மட்டுமல்லாமல், குறிப்பாக சுமந்திரனை வெல்லவைக்க வேண்டிய கடமை வட பகுதி தமிழ் மக்களுக்கு உண்டு என இரா.சம்பந்தனே கூறியிருந்தார். மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என்ற, அர்த்தத்திலேயே அதை அவர் கூறியுள்ளார் போல் தெரிகிறது.
மக்களும் அவருக்கு வாக்களித்து அவரை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தார்கள். முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையே என வடமாகாணசபையின் தீர்மானத்துக்கு எதிராகக் கருத்துக்களை கூறியவர் சுமந்திரன்;. ஆனால், அண்மைகாலமாக விடுதலைப் புலிகளின் காலத்தில் நடந்த, முஸ்லிம் மக்களின் வெறியேற்றத்தை மட்டும், இனச் சுத்திகரிப்பு என்று கூறி அதற்காக ஒட்டு மொத்த தமிழ் மக்களும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று, திரும்பத் திரும்பஆணித்தரமாகக் கூறுகின்றார்.
இவருக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இப்போது அவர் வடமாகாண சபை முதலமைச்சர் மீது குற்றம் சுமத்துகிறார். வடமாகாண முதலமைச்சரை தனிப்பட்ட தமிழரசு கட்சி மட்டும் தெரிவு செய்யவில்லை.
பங்காளிகட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணிஆகிய கட்சிகளின் ஒத்துழைப்புடன்தான் பொது வேட்டபாளராக களம் இறக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். அத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றிபெறாவிட்டாலும் தமிழ் தேசியகூட்டமைப்புக்கு கணிசமான வாக்குகளை பெற்றுவெற்றிக்கு வழிவகுத்ததில் எமக்கும் முக்கியபங்குண்டு என்பதை சுமந்திரன் அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
எனவே, முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்வது சுமந்திரன் சார்ந்த கட்சியின் பொருத்தமில்லாத செயற்பாடாகும். அதுவும் சுமந்திரன், முதலமைச்சர் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டு வேடிக்கையானது. அதாவது தேர்தலுக்காக பணம் வசூல் செய்ய வெளிநாடுகளுக்கு போகவில்லை என்ற காரணத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறுகின்றார்.
மக்கள் அன்றாடம் தமது தேவைகளை பூர்த்திசெய்ய, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க, அவர்களின் இழந்தபொருளாதாரத்தை மீட்டெடுக்க நிதிவசூல் செய்துவாருங்கள் என்று முதலமைச்சரிடம் கேட்டு, அவர் அவ்வாறு போகாமல் இருந்திருந்தால் அவர் மீதுகுற்றம் சுமத்துவதில் ஒரு நியாயம் இருக்கும்.
ஆனால் தேர்தல் செலவுகளுக்காக, சுமந்திரன் போன்ற வேட்பாளர்களை வெல்லவைப்பதற்காக, அவர் மீண்டும் பதவி சுகத்தைஅனுபவிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக நிதிவசூல் செய்ய கேட்டபொழுது முதலமைச்சர் மறுத்தமை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக புலம் பெயர்ந்த தமிழர்களால் சுமந்திரனிடம் வழங்கப்பட்ட பெருந்தொகையான பணத்துக்கு இதுவரை கணக்கும் இல்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உதவிகளும் போய்ச் சேரவும் இல்லை. அதனால், முதலமைச்சரை வசூல் செய்யஅனுப்பி வைத்து பழியையும் இலகுவாக அவர் மீது போட்டுதான் தப்பிவிடலாம் என்ற நினைப்பில் இருந்திருக்கின்றார்.
முதலமைச்சராகத் தெரிவு செய்த அனைத்து பங்காளிக் கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டிருந்தால், முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம். ஆனால் அவரை முதலமைச்சராகத் தெரிவு செய்த பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்து களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டது. அவ்வாறு இருக்கும்போதுஅவர் எவ்வாறு கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பார். அதனால்தான் தான் ஒரு நீதியரசர் என்பதை நிலைநாட்டி, நடுநிலை வகித்தார். இதிலும் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எமது மக்களின் எதிர்கால நலனுக்கு எதுவும் செய்யாமல் காணாமல் போன தம் உறவுகளுக்கு, என்ன நடந்தது என அங்கலாய்க்கும் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல், முதலமைச்சர் மீது குற்றங்களை முன்வைத்து காலத்தை வீணடிக்கும் செயலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்திக் கொள்ளவேண்டும்.
எதிர்கட்சித் தலைவர் பதவியை பயன்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் மறைந்த அ.அமிர்தலிங்கம் எவ்வாறு தமிழர்களின் பிரச்சினையை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றார் என்பதை நான் சொல்லித்தான் சம்பந்தன்; தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை, அவருக்கே அது நன்கு தெரியும்.
எனவே, அவரைப் போன்று செயற்பட்டு எமது மக்களின் கனவுகளைநனவாக்குங்கள். சுமந்திரன் போன்றோர் மீது நடவடிக்கை எடுத்து, நம்பி வாக்களித்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். அவ்வாறு செய்ய முடியாது போனால், தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமாச் செய்யுங்கள். 2004ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிகளை வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச் சென்றதைத் தவிர, வேறு எதனையும் சாதிக்கவில்லை என்பதே உண்மை' என ஆனந்த சங்கரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago