Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம்
"கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி, இரத்தினபுரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்துகொண்ட பொலிஸ்மா அதிபருக்கு வந்த அலைபேசி அழைப்பானது, அவருக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவோ, யாரையும் கைது செய்ய வேண்டாம் என்று கூறுவதற்காகவோ அல்லது எவரையாவது கைது செய்யுமாறு கூறுவதற்காகவோ அல்ல. ஆனால், ஒரு விசாரணையொன்று எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை அறிவதற்காகவே ஆகும்" என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (07) இடம்பெற்றபோது, ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டாவறு மழுப்பலாகப் பதிலளித்தார்.
"பொலிஸ்மா அதிபரை இதை செய், அதை செய் என அழுத்தம் கொடுப்பதற்காக 'சேர்' என்பவர் அலைபேசியில் உரையாடவில்லை. 'நிலமே' என்பவரின் விசாரணை தொடர்பிலேயே அவர் பேசியிருந்தார் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது. 'அவரை கைது செய்வேன், கைது செய்ய மாட்டேன்' என்று அவர் கூறவில்லை. அதை ஒரு பெரிய விடயமாக எடுத்துக்கொண்டு செய்தி வெளியிட்டுள்ளமையால், ஊடகவியாலாளர் மத்தியிலும் அரசியல்வாதிகளின் மத்தியிலும், இது பெரியதொரு விடயமாக பேசப்பட்டு வருகின்றது" என்று அவர் கூறினார்.
ஆனால், அமைச்சர் கூறுவதற்கு மாறாக, "என்னுடைய அனுமதியின்றி யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள்" என, பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
"நீங்களா அவ்வாறு அலைபேசியில் உரையாடியவர்" என்று ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது,
"நான் யாருக்காகவும் அவ்வாறு அலைபேசியில் உரையாடியது இல்லை. அதற்கான தேவையும் எனக்கு நேர்ந்தது இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
8 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago