2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'சி.வி.க்குத் தேவையில்லை, அரசியலமைப்பு வரும்'

Gavitha   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பு குறித்து யார் என்ன சொன்னாலும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணியில் நாடாளுமன்றம் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சரால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில, இணைந்த எதிரணியின்  தலைவர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் என்ன கூறினாலும் அல்லது வேறு எவறேனும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டாலும், இந்த அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

'அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணயக்குழுவும் அரசியல் சட்டசபையும் உள்ளதால், முதலமைச்சர் இதில் தலையிடத் தேவையில்லை. இந்தக்குழுவின் மூலம் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய அதேவேளை, ஆதரவும் கிடைத்தது. அதனால், நாம் எமது பணியை செய்வோம்' என்று கூறியுள்ளார்.

ஆனால், இது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளல் அனைவருக்கும் நல்லதாகும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .