Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
21 மில்லியன் எனும் மிகவும் குறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்டில், தமிழ் - சிங்கள மொழிகளில் பேசத்தெரியாதோர் இருப்பது, வெட்கக்கேடான ஒரு விடயமாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நாடாளுமன்றில் தொடர்ந்து உரையாற்றிய அவர், “நாட்டில் இதுவரை ஆட்சிசெய்த அரசுகளிலேயே, இந்த அரசு தான் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் அதிகமாக பேசுகின்றது என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால், இந்த அரசில், தேசிய கலந்துரையாடல் அமைச்சுக்கு வெறும் 191 மில்லியன் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. சகவாழ்வுக்காக 12 மில்லியன் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இவை எப்படி போதுமானதாக அமையும்?” என்றார்.
“சகோதர மொழியைப் பெசத் தெரியாமைக்கு, பாடசாலையோ அல்லது பெற்றோரோ காரணமல்ல. மாறாக 1948ஆம் ஆண்டில் ஆட்சி செய்த அரச தலைவர்களே, அதற்குக் காரணம். டி.எஸ்.சேனாநாயக்க ஆற்றிய சுதந்திரத்தின உரையின்போது தமிழ், சிங்களம் என இருமொழிகளும் அரச கரும மொழிகள் எனக் கூறியிருந்தால், இந்தப் பிரச்சினை மட்டுமல்ல, நாட்டில் 30 வருடகாலமாக நிலவிய 30 யுத்தம் கூட ஏற்பட்டிருக்காது.
ஆனால், எமது மஹிந்த அரசு பல்வேறு தரப்புக்களின் எதிர்ப்பையும் மீறி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வடக்கில் தேர்தலை நடத்தியது. அதன்போது, பலரும் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் பெரும்பான்மையாக வெற்றியடையும். எனவே, அவசரப்பட்டு தேர்தலை வைக்க வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தின்போதே தெரிவித்தார்கள்.
எனினும், அவற்றுக்கெல்லாம் செவி சாய்க்காது எமது அரசால், தேர்தல் நடத்தப்பட்டது. எம்மைப் பொறுத்தவரை நல்லிணக்கத்துடன் கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே நோக்கமாகும்” என, அவர் மேலும் கூறினார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago