2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'தேசிய பாதுகாப்பு சட்டமூலம் வரும்'

Kanagaraj   / 2016 மே 13 , மு.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இடம்பெறும் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய பாதுகாப்பு சட்டமூலமொன்று மிகவிரைவில் கொண்டுவரப்படவுள்ளது' என்று, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டு மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே, இச்சட்டமூலத்தை தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் என அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பயங்கரவாதத்தைத் தடுக்கும் சட்டமூலத்தை நீக்கிவிட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் என்ற பெயரில் புதிய சட்டமூலமொன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கேட்டபோதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X