Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 நவம்பர் 20 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் தற்போதைய தேசிய பாதுகாப்பு நிலவரம் தொடர்பில், திருப்தியடைய முடியவில்லை என்று, நந்திக்கடலில் இறுதிக்கட்ட யுத்தத்தை நடத்திய இராணுவத்தின் 53ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்தவரும் தற்போது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினைக் கட்டுப்படுத்த, உரிய தரப்பினர் உடனடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறில்லாவிடின், இது பாரியதொரு பிரச்சினையைத் தோற்றுவித்துவிடும் எனவும் காலியில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்தினம் மிகவும் கடினமாகச் செயற்பட்டிருப்பார்களாயின், ஆவா குழுவின் செயற்பாடகளை முடக்கியிருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்றும், அவர் இதன்போது தெரிவித்தார்.
“இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு, கடந்த காலங்களில் மிகவும் பலம்வாய்ந்ததாகக் காணப்பட்டது. அதனால், ஆவா போன்ற குழுக்கள் இயங்க, அக்காலப்பகுதியில் வாய்ப்பிருக்கவில்லை. இருப்பினும், தற்போதைய காலப்பகுதியில், பல்வேறு காரணங்கள் காரணமாக, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் சுதந்திரமான இயங்க முடியாதுள்ளது” என்றும் அவர், மேலும் குறிப்பிட்டார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago