2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நகுலன் கைது

Kanagaraj   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் கட்டளையிடும் அதிகாரியான நகுலன் என்றழைக்கப்படும் சிவமூர்த்தி கணபதிபிள்ளை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் கோப்பாயில் வைத்தே அவர், நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் (ரி.ஐ.டீ) கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் எனப்படும் ராம் என்பவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாகவே நகுலன் என்பவர் கைது செய்யப்பட்டுளு;ளார் என்றும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நகுலன், தனது மனைவியுடன் வாழ்ந்துவருகின்றார். அவர்களுக்கு நான்கு வயதில் பிள்ளையொன்றும் இருகின்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X