2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘நல்லிணக்கம் இல்லையேல் பதவி விலகுவேன்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டால், அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகுவதற்கும் தான் தயங்கப்போவதில்லை என்று, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

அமைச்சின் பொறுப்பிலுள்ள சகவாழ்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில், பல்வேறு தடங்கல்களை தான் எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், தனது அமைச்சுக்கு, உரிய வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய, அரசாங்கம் தவறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

நாட்டில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் காணப்பட்டாலும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் காணப்படாமையே நாட்டிலுள்ள பிரதான பிரச்சினையாக காணப்படுவதாகவும், சகோதரமொழி ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

பாரிய பொறுப்பைத் தன்னகத்தே கொண்டுள்ள தமது அமைச்சுக்கு, அரசாங்கத்தினால் உரிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை எனவும் தனக்கு உரிய வகையில் பணியாற்ற முடியாத பட்சத்தில் தான் நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாத பட்சத்தில் தான் பதவி விலகவும் தயாராகவுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், தனது அமைச்சு, மிக முக்கியமான பொறுப்பை கொண்டுள்ளமையினால், தனக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என, மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .