2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘நிதியைக் குறைத்து மக்களுடன் விளையாடாதீர்கள்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

“மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்து, மக்களுடன் விளையாட வேண்டாம். அதன் விளைவு, ஆபத்தாக இருக்கும்” என, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

மேலும், “மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை அதிகரிப்பது தொடர்பில், ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும்” எனவும் குறிப்பிட்டார். 

மேல் மாகாண முதலமைச்சின் காரியாலயத்தில், நேற்றுப் புதன்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளில் குறைகள் காணப்படுகின்றன” என்றார்.  

“அண்மையில் ஒன்றுகூடிய அனைத்து மாகாண முதலமைச்சர்களில் எவரும், தங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும் என கேட்கவில்லை. மாறாக, மக்களுக்கு சேவையாற்ற போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள் என்றே கோரினோம். ஆனால் நிதி அமைச்சரோ, கூடுதலாக நிதி ஒதுக்கினால், மாகாண முதலமைச்சர்கள் வௌிநாட்டு பயணங்களை மேற்கொள்வார்கள் என சர்வசாதாரணமாக கருத்து வௌியிட்டுள்ளார். 

இக்கருத்து, எம்மில் எந்தளவுக்கு தாக்கம் செலுத்தியிருக்கும் என்பதை அவர் அறிந்திருக்கமாட்டார். இம்முறை மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், சுமார் 2,451 மில்லியன் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இத்தொகையைக் கொண்டாட, நாங்கள் வௌிநாட்டு பயணங்களை மேற்கொள்ளப்போகிறோம்”  என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .