Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 13 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் மற்றும் மிகிந்தலையில் உள்ள 13 பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை மூடப்படும் என வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொஷன் உற்சவத்துக்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக வருகை தரவுள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கான தங்குமிடங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இந்த பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.
அதன் காரணமாக குறித்த பாசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் மத்திய வித்தியாலயம், அநுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் வித்தியாலயம், புனித ஜோசப் வித்தியாலயம், விவேகானந்த மகா வித்தியாலயம், வலிசிங்ஹ ஹிரிச்சந்திர மகா வித்தியாலயம், நிவந்தக்க சேத்திய வித்தியாலயம், மகா போதி வித்தியாலயம், தந்திரிமலை கொணவிமல மகா வித்தியாலயம், மிகிந்தலை மகா வித்தியாலயம், மிகிந்தலை கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் மிகிந்தலை கமலக்குளம் வித்தியாலயம் என்பனவே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .