Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
தமது பிரச்சினைகளை, பேச்சுவார்த்தையின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள முடியாத போதே, இறுதிக்கட்டமாக போராட்டத்தில் ஈடுபட வேண்டும். எனினும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், பேச்சுவார்த்தைக்கு முன்பே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்த்தின் ஊடாக அவர்களது பலத்தைக் காட்டவில்லை. அவர்கள், பொதுமக்களையே அசௌகரியத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்” என்று, அரசாங்கம் நேற்றுத் தெரிவித்தது.
நேற்று முன்தினம் (29) மாலை எமக்கு அறிவித்துவிட்டு, நேற்றுக் (30) காலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தமானது, நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் கூறிய விடயத்தை புரிந்துகொள்ளாததால் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன கூறினார்.
நாடாளுமன்ற கட்டத்த தொகுதியில் நேற்று இடம்பெற்ற, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,
“அரச ஊழியர்களுக்கு வரி அறவிடும் நடவடிக்கை இப்போது அல்ல, மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே கொண்டுவரப்பட்டது. தமது சம்பளத்தின் 20 சதவீதத்தை, வரியாகச் செலுத்த வேண்டும். அரச வைத்தியர்கள் இரண்டு சம்பளம் (வருமானம்) பெறும்போது, முதலாவது சம்பளத்தில் அறவிடப்பட்ட வரி, இரண்டாவது சம்பளத்தில் குறைத்துக்கொண்டே அறவிடப்படும்.
ஆனால், இது புரியாமல், இரண்டு சம்பளத்துக்கும் வரி அறவிடப்படுவதாகவே அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான போராட்டங்கள் தொடர்பில், எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago