Gavitha / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாநூ கார்த்திகேசு
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த தேசிய அரசாங்கமொன்றே 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்று மக்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை அதேபோல, இன்றும் மக்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
இரண்டு கட்சியினதும் ஆதரவாளர்களிடம் அன்றும் தேசிய அரசாங்கம் அமைக்கவேண்டிய தேவையொன்று இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இங்கிருந்து பிரிந்து சென்று ஆட்சியமைத்தனர். இன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள், தாங்கள் பண்டார நாயக்காவின் கொள்கையைப் பின்பற்றுவதாக கூறுகின்றார்கள்.
அவர்களும் அன்று சுதந்திரக்கட்சியில் இருந்தவர்களே எனத் தெரிவித்தார்.
கட்சியின் தேசிய மாநாட்டுக்கு கட்சியின் சார்பில் அனைவருக்கும் இம்முறை அழைப்பு விடுத்துள்ளோம். நாங்கள் கட்சியை முதன்மைப்படுத்தியே செயற்படுகின்றோமே ஒழிய, தனிநபர் பிரபலங்களை என்றுமே முதன்மைப்படுத்தவில்லை என்றார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago