Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 மே 06 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினரை நீக்குவது தொடர்பான முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, மாற்றப்பட்ட பாதுகாப்பில் இனி எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டார்.
ஒரு வருடத்துக்கு முன்னரே, இந்தத் தீர்மானம், பாதுகாப்புச் சபையின் போது எட்டப்பட்டது. அரசாங்கம் என்ற வகையில், பிரமுகர் பாதுகாப்பில், இராணுவத்தினரை இணைக்கப்போவதில்லை என்ற தீர்மானமும் அந்த கவுன்ஸிலின்
கூட்டத்தின் போது எட்டப்பட்டதாகவும் அந்தத் தீர்மானத்துக்குள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் பாதுகாப்பு கூட உள்ளடக்கப்படுகிறது என்றும் விஜேவர்தன தெரிவித்தார்.
மிஹிந்தலை ரஜமஹா விகாரையில், நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த இராஜாங்க அமைச்சரிடம், மஹிந்தவின் பாதுகாப்புத் தொடர்பில், ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்காகவே, இராணுவம் இருக்கின்றது. நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் என்போரே நியமிக்கப்படுவர். மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக, இராணுவ உத்தியோகத்தர்கள் 105 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 50 பேரே தற்போது அகற்றப்பட்டுள்ளனர்' என்றார். 'அகற்றப்பட்ட 50 இராணுவ உத்தியோகத்தர்களுக்குப் பதிலாகவே, 50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவருக்குத் தேவையாயின், பொலிஸார் 150 பேரை வழங்கவும் நாம் தயாராகவே உள்ளோம். அவருடைய பாதுகாப்புத் தொடர்பில், எவரும் எந்தவொரு பிரச்சினையையும் ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை' என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago