Gavitha / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியில், தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் இயங்கிவந்த தனியார் வதிவிடப் பயிற்சி முகாமொன்றில் பங்குபற்றிய மாணவிகள் பலரை, வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்றுத் திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பயிற்சி மையத்தின் தலைவரான சந்திமல் சந்திமல் கமகே (வயது 35) என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சி மையத்தின் தலைமை மேற்பார்வையாளரும் நிதி நிர்வாக அதிகாரியொருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
5 minute ago
16 minute ago
23 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
23 minute ago
42 minute ago