2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

2 மேதினக் கூட்டங்களில் பங்கேற்ற அமைச்சர்

Kanagaraj   / 2016 மே 03 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற இரண்டு மேதினக்கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

காலி மற்றும் கிருலப்பனையில் இடம்பெற்ற இவ்விரு கூட்டங்களிலுமே அவர் பங்கேற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வசமுள்ள வடமத்திய மாகாண சபையின் காணி மற்றும் கிராம அபிவிருந்தி அமைச்சர் எஸ்.பீ சேமசிங்கவே இவ்வாறு பங்கேற்றுள்ளார்.

இவ்விரு மேதினக் கூட்டங்களிலும் தான் பங்கேற்றதாக அறிவித்துள்ளார்.

அநுராதபுரம் கிழக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளரான தான், அநுராதபுர மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியின் மிகப்பழைய அமைப்பாளர். அரசியல் கொள்கையுடன் வாழும் தான், சுதந்திரக் கட்சிக்கு வெளியில் அரசியல் செய்யவில்லை. ஆகையால் கட்சி இரண்டாக பிளவுபடுவதை நான் விரும்பவில்லை.

அதனால்தான், கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலியில் இடம்பெற்ற கூட்டத்திலும், கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிருலப்பனையில் நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்றேன் என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X