2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

'மீனவர்களை கைதுசெய்வதை கடற்படை கைவிடவேண்டும்'

George   / 2016 ஜூன் 01 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

45 நாள் தடைக்காலம் முடிந்து, தங்களது வாழ்வாதாரத்தைத் தேடி கடலுக்கு மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களைக் கைது செய்வதை இலங்கை கடற்படையினர் கைவிட வேண்டும்' என இந்திய மத்திய இணை அமைச்சர்  பொன். இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று(1) பேசியபோது ராதாகிருஷ்ணன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்த குற்றச்சாட்டில்இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .