2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

2.8 மில்லியன் ரூபாய் பெறுமியான சிகரெட்டுக்களுடன் மூவர் கைது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயிலிருந்து இலங்கைக்கு 2.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரெட் பெட்டிகளை கடத்துவதற்கு முயற்சி செய்த இரண்டு பெண்களையும் ஆணொருவரையும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து சுங்கத்திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை (24) காலை கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 400 அட்டைபெட்டிகளில் இருந்த 80,000 சிகரெட்டுக்களை 4 பொதிகளிலிருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஹோமாகமயைச் சேர்ந்த 40, 32 வயதுகளையுடைய சகோதரிகளும் மாத்தளை பகுதியைச் சேர்நத 40 வயது நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு பெண் அழகுக்கலை நிலையமொன்றை வைத்திருப்பதாகவும் மற்றைய பெண் ஹோமாகம பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சிகரெட் கடத்துவதில் ஈடுபட்டுள்ளதாகவும் சிகரெட்டுக்களை பரிமாற்றம் செய்வதற்கு குறித்த இரண்டு பெண்களையும் பயன்படுத்தி வந்திருப்பார் என்று சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X