2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘ரூபாய் 25,000 அபராதத்தை அறவிடுமாறு நானே கூறினேன்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

போக்குவரத்தின் போது, சாரதிகள் தவறிழைத்தால், 25,000 ‌ரூபாய் அபராதத்தை விதிக்குமாறு, தான் கூறியதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.    நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (30) இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

“இந்த நாட்டைக் காப்பாற்ற, யாராவது நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த நாளும் ஜனரஞ்சக அரசியலைச் செய்துகொண்டிருக்க முடியாது. 25,000 ரூபாய் அபராதத்தை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதனூடாக, பொதுமக்களைக் கொலை செய்ய உரிமை கோருகின்றனர்.

பாதீட்டில் முன்வைக்கப்பட்ட போக்குவரத்துச் சட்டத்தை மீறினால், ஆகக்குறைந்த அபராதமாக ரூ.2500 அறவிடப்படும் என்பதற்காக அவர்கள் போராடவில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .