Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 மே 06 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்துக்குள் தான் எவரையும் தாக்கவில்லை என்றும் அவ்வாறு தாக்கியிருந்தால், தாக்குதலுக்கு இலக்கானவர், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அல்ல, சத்திர சிகிச்சைப் பிரிவிலேயே அனுமதிக்கப்படுவார் என்று, வடமேல் மாகாண அபிவிருத்திக்கான பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் கணக்கில் குறிப்பொன்றைப் பதிவு செய்துள்ள பிரதியமைச்சர், அதில் தன் தரப்பு நியாயம் என்ற தோரணையில் விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சபையில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, ஒன்றிணைந்த எதிரணியினர் அநாகரிகமாக நடந்துகொண்டதுடன்,
'வாடா, போடா, டேய், அவனை வாயை மூடச்சொல்லு' போன்ற வாத்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டு, கத்திக் கூச்சலிட்டனர் என்றும் தெவரப்பெரும அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்போது தான், 'நீங்கள் இவ்வாறு நடந்துகொள்ள, மேர்வின் சில்வாவிடமிருந்தா கற்றுக்கொண்டீர்கள்?' என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிடம் கேட்டதாகவும், அப்போது அவர் பாய்ந்துவந்து தன்னைத் தாக்க முற்பட்டதாகவும் பிரதியமைச்சர் தெவரப்பெரும கூறியுள்ளார்.
இதன்போது, பிரசன்ன ரணவீர எம்.பி.யைத் தடுக்க முற்பட்ட சந்தீத் சமரசிங்க எம்.பி, அடிபட்டுக் காயமடைந்ததுடன் கீழேயும் விழுந்துவிட்டார். இதன்போது, அவரது முகத்தில் எட்டி உதைத்தனர். இதனால், அவருடைய முகம் வீங்கிவிட்டது.
அத்தருணத்தில் தான், வேறு சிலரைப் பிடித்துக்கொண்டிருந்ததாகவும் எவரையும் தாக்கவில்லை என்றும் கூறியுள்ள பிரதியமைச்சர், ஒன்றிணைந்த எதிரணியினர் என்று கூறிக்கொள்ளும் சிலர், தாங்களே நாடாளுமன்றத்தின் உரிமையாளர்கள் என்ற நினைப்பில் ஆடிக்கொண்டிருப்பதாகவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago