Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்ட பெறுமதி சேர் (வற்) வரிச் சட்டமூலத்தை, இம்மாதம் 26ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நேற்று வியாழக்கிழமை (20) கூறினார்.
அத்துடன், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 20 சதவீத உரிமையை இலங்கைத் துறைமுக அதிகாரசபை வைத்துக்கொண்டு, 80 சதவீதமான உரிமையை சீனாவுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்தே, இம்முறை வரவு - செலவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளன என்றும், நிதியமைச்சர் கூறினார்.
நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், நேற்று வியாழக்கிழமை (20), நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னதாக, சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர், ஹம்பாந்தோட்டைத் துறைமுக நிர்மாணத்துக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகளவு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமையால், அத்துறைமுகத்தை, சீனாவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறித்த துறைமுகத்தின் உரிமையில் நூற்றுக்கு 20 சதவீதத்தை, இலங்கை துறைமுக அதிகாரசபை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே, மேற்படி துறைமுகம், சீனாவிடம் கையளிக்கப்படுமென்றும், அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்ட பெறுமதி சேர் (வற்) வரிச் சட்டமூலத்தை, இம்மாதம் 26ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென்றும் கூறினார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago