Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்வீடான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக 'ஹூ' சத்தமிட்டவர்கள் தொடர்பில், இரகசியப் பொலிஸார், விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, திங்கட்கிழமை (01) கொழும்பை வந்தடைந்ததன் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக செல்கையில் 'ஹூ' சத்தமிட்டப்பட்டது.
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மேற்படி விவகாரம் தொடர்பில் அமைச்சர் கருத்துரைத்தார். அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
'பாதயாத்திரையை ஏற்பாடு செய்தவர்கள், சிறுவன் ஒருவர் மூலம் ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அச்சிறுவன் தொடர்பில் இரகசியப் பொலிஸார், விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு சுதந்திரக் கட்சி உறுப்பினரும் தமது தாய் வீட்டுக்கு அவ்வாறு அபகீர்த்தியை ஏற்படுத்துவது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
'ஐக்கிய தேசியக் கட்சியினரால், கடந்த காலங்களில் ஏற்பாடு செய்திருந்த பேரணிகளில் தாக்குதல் மேற்கொண்டவர்கள், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்தி, சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்த சிலர் முயல்கின்றனர். தற்போதைய அரசியலமைப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவினால் அதிகாரத்துக்கு வர முடியாதென்பது தெளிவாக உள்ள போதும் அவரால், மக்கள் தவறான முறையில் வழிநடத்தப்படுகின்றனர்' எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
5 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Oct 2025