2025 ஜூலை 23, புதன்கிழமை

’1,600 ரூபாய் அதிகரிப்பு கோரிக்கை ஏமாற்று வித்தை’

Freelancer   / 2025 ஜூலை 23 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக, எதிர்க்கட்சியினர்   பலரும் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.எம்.பி க்கள் இருவர் கையொப்பமிட்டு ஆகக் குறைந்த சம்பளம் 1,600 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என திருத்தம் ஒன்றை முன் வைத்துள்ளனர். இது  ஒரு ஏமாற்று வித்தை என்று பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.  .

உண்மையில் இதன் மூலம் எதையும் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டே  மீண்டும் ஏமாற்றுகின்றார்கள்.தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் 2027 செப்டம்பர் மாதமே நிறைவு பெறுகிறது எனினும் அதற்கு முன் நாம் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பள அதிகரிப்புக்கு வழி வகுப்போம் என்றார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22)  நடைபெற்ற  விவாதத்தில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே  இவ்வாறு தெரிவித்தார். தனியார் துறை  சம்பளம் தொடர்பில் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த சட்டம் எப்போதோ கொண்டுவரப்பட வேண்டியது. முற்போக்கு முன்னணி தொழிற்சங்கங்கள் அதை செய்யவில்லை. 

சிலர் நீதிமன்றத்திற்கு சென்றனர். எவ்வாறெனினும்  இன்றைய தினம் இந்த நாட்டின் உழைக்கும் தொழிலாளர்களுக்கு முக்கியமான தினம்.   17,500 ரூபாவில் இருந்து 30,000 ரூபாய் வரை தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது.

இப்போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில்  பலரும் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இதுவரை காலமும் யார் நாட்டை ஆட்சி செய்தார்கள்? 2024 ஒன்பதாம் மாதம் 10ஆம் திகதி தான் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் அறிவர். கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே அதனை மேற்கொள்ள முடியும். தொழிற்சங்கத்தினர் உட்பட எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் மூன்று வருடங்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பான இணக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர். 

அந்த கூட்டு ஒப்பந்தம் 2027 செப்டம்பர் மாதத்திலேயே   நிறைவு பெறுகிறது.எனினும் நாம் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .