2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

10 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த நாமல்

Freelancer   / 2025 நவம்பர் 10 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் குழுவினர் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு சென்றுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு வந்திருந்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு வந்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X