Freelancer / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(3) உத்தரவிட்டது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மன்னாருக்கு தெற்கு கடற்பரப்பில் இழுவைப் படகு ஒன்றில் மீன் மிடித்துக்கொண்டிந்த 10 இந்திய மீனவர்களை இன்று திங்கட்கிழமை(3) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தாழ்வுபாடு கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை(3) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். (a)

7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago