Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 22 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை ஆகியவை 2025 ஜூலை 05முதல் 19 வரை கடுகண்ணாவ, அலதெனிய, தவுலகல, கம்பஹா, கட்டுநாயக்க, நிலாவெளி, திருகோணமலை மற்றும் மன்னார், நடுகுடா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, 10 கிராம் 40 மில்லிகிராம் ஐஸ், 11860 வெளிநாட்டு சிகரெட்டுகள், 264 மாத்திரைகள் மற்றும் 33) மாத்திரை போத்தல்கள், 05 கிலோகிராம் 600 கிராம் குஷ் போதைப்பொருள்கள், 104 கிராம் கேரள கஞ்சாவுடன் 10 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ஷில்ப நிறுவனத்தின் கடற்படையினர் கடுகண்ணாவை பொலிஸாருடன் இணைந்து, கடுகண்ணாவை பகுதியில் மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, 10 கிராம் மற்றும் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 04 சந்தேக நபர்கள், அம்பகோடே பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து அலதெனிய பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2400 வெளிநாட்டு சிகரெட்டுகள், ஒரு சந்தேக நபர் மற்றும் ஒரு மோட்டார் வாகனம் கண்டி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து தவுலகல பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டபோது 6300 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் மற்றும் ஒரு மோட்டார் வாகனத்தையும் கைது செய்தனர்.
மேலும், மினுவங்கொடை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து இலங்கை கடற்படைக் கப்பல் ரங்கல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, 3160 வெளிநாட்டு சிகரெட்டுகள், 264 மாத்திரைகள், 33 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 41 கிலோகிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா மன்னார் நடுகுடா கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 18 பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் 5 கிலோகிராம் 600 கிராம் குஷ் போதைப்பொருளை கைப்பற்ற கடற்படையினர் ஏற்பாடுகள் செய்த்துடன், திருகோணமலை நிலாவேலி, கும்புருபிட்டி பகுதியில், சர்தாபுர பொலிஸார் சிறப்புப் படையுடன் இணைந்து கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நடத்திய சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேக நபரொருவர் நூற்று 104 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுகன்னாவ, பிலிமத்தலாவ, கொதடுவ, கொழும்பு, ஹரிஸ்பத்துவ, கண்டி மற்றும் குபுறுப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 மற்றும் 62 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். (a)
8 hours ago
8 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
03 Oct 2025