Editorial / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புக்குட்பட்ட கொள்ளுப்பிட்டி, தெஹிவளை உள்ளிடட சில வீதிகளில், இன்று (30) விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போக்குவரத்துத் திட்டம், காலை 7 மணி முதல் 9 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் 6 மணிவரையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை, இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் பொஹ்ரா மாநாட்டை முன்னிட்டே, இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், வெள்ளவத்தையில் இருந்து கொள்ளுபிட்டி நோக்கி செல்லும் வாகனங்கள், ஹெய்க் வீதியில் வலதுபக்கமாக திரும்பி, காலி வீதியூடாக பயணிக்க முடியும் என்றும் கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை பயணிக்கின்றவர்கள் பனைமர வீதியில் இடதுபக்கம் திரும்பி, காலி வீதியூடாக பயணிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திலிருந்து பஸ்ஸில் பயணிக்கின்றவர்கள், ரயில் நிலைய வீதிக்கு எதிர்த்தசையில் பஸ் ஏறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago