2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Freelancer   / 2021 நவம்பர் 23 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தென் கிழக்கு கடற்பகுதியில் நிலவும் குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக, பத்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம், இன்று (23) அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட குழப்பம், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இது வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .