2025 ஜூலை 05, சனிக்கிழமை

11 கஜமுத்துக்களுடன் நால்வர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி பிரபல பாடசாலைக்கு அருகிலும் பல்லேகல பிரதேசத்தில் பல்லேகல தேசிய கிரிக்கட் விளையாட்டரங்கிற்கும் அருகிலிருந்து, ​ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் கஜமுத்துக்கள் பதினொன்றுடன் நான்கு சந்தேகநபர்கள் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் பதுளை, மொனராகலை, அம்பாறை மற்றும் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 27,28,35 மற்றும் 40 வயதுடையவர்களென்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் இன்று (10) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .