Editorial / 2026 ஜனவரி 04 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்
மன்னார் பொலிஸ் சிறப்பு அதிரடி படையுடன் இணைந்து, இலங்கை கடற்படை, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், சட்டவிரோதமாக மீன்பிடிக்க பயன்படுத்தப்படும், வாட்டர் ஜெல் எனப்படும் நூற்று பதினைந்து வணிக வெடிபொருட்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல்கள் , மன்னார் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனை செய்த போது இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் மற்றும் வாட்டர் ஜெல் எனப்படும் நூற்று பதினைந்து வணிக வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .