2025 ஜூலை 07, திங்கட்கிழமை

12 மணிநேர நீர்வெட்டு

Freelancer   / 2025 ஜூலை 07 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 
 
சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று காலை 8 மணி முதல் இரவு 8.30 வரை 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

பேலியகொடை, சீதுவை நகர சபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, மினுவாங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .