Editorial / 2026 மார்ச் 17 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதினைந்து வயதுச் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, 17 ஆண்டுகள் கடும் உழைப்புடன் கூடிய சிறைத்தண்டனை விதித்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம தீர்ப்பளித்தார்.
பயாகல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய (சம்பவத்தின் போது) வெல்லகே ஜயவர்தன சில்வா என்பவரே இவ்வாறு தண்டனைக்குள்ளானவர். அஹங்கம பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி, 2015 டிசம்பர் மாதம் கொக்கல பகுதியிலுள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சந்தேக நபர் அந்தப் பகுதியில் கருவாப் பட்டை உரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த போதே இச்சிறுமியுடன் பழகியுள்ளார்.
இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளிக்கு தலா 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், கடூழிய சிறைத்தண்ணடனைக்கு மேல் 32,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனைச் செலுத்தத் தவறின் மேலதிக 6 மாத சிறைத்தண்டனை. பாதிக்கப்பட்ட சிறுமிக்கான இழப்பீடு: 400,000 ரூபாய். சிறுமியின் மூலம் பிறந்த குழந்தைக்கான இழப்பீடாக 600,000 ரூபாய் வழங்வேண்டும். இழப்பீட்டைச் செலுத்தத் தவறின் மேலதிக 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இச்சம்பவத்தின் மூலம் சிறுமி கருவுற்றதையடுத்து பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட டி.என்.ஏ (DNA) பரிசோதனையில், பிறந்த குழந்தையின் தந்தை இக்குற்றவாளிதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago