2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

14 வயதான மாணவி துஷ்பிரயோகம்: 65 வயதானவர் கைது

Editorial   / 2021 ஒக்டோபர் 01 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார இலங்கதிலக்க

14 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் ​பேரில் 65 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவிரவில பாக்றோ தோட்டத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர், ஹட்டன் நீதவான் ஆர். ராமமூர்த்தி முன்னிலையில் ​நேற்று (30) ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரான திருமணம் முடித்த 65 வயதான அந்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, பரிசோத​னைக்காக, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X