2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

18க்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வருகிறது

Freelancer   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

9 மில்லியன் டோஸ் சினோஃபார்ம் மற்றும் 14 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசிகளை அலகு விலையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டெம்பர் 30 ஆம் திகதியிலிருந்து தடுப்பூசி வழங்குவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி தேவைகளுக்காக அமைச்சரவை அமைச்சர்களால் நியமிக்கப்பட்ட கலந்தாய்வுக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் 14 மில்லியன் மக்களுக்கு ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டது.  

ஓக்ஸ்ட்ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 19.49 மில்லியன் தடுப்பூசிகளை நாடு பெற்றது. அதில், 11.26 மில்லியன் முதல் டோஸாகவும் 3.25 மில்லியன் இரண்டாவது டோஸாகவும்  பயன்படுத்தப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X