2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

18 வயது மாணவன் கொரோனாவால் பலி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள பிரபல கல்லூரியில் க.பொ.த உயர்தரதத்தில் பயிலும்  18 வயதான மாணவரொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி மாணவன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மாணவன், 14 ஆம் திகதி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் (களுபோவில) அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

மாணவன் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X