Janu / 2026 மார்ச் 19 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
"ஆண்டின் பிரபல பத்திரிகைக்கான 'ஸ்லிம் காண்டார்' (SLIM Kantar) மக்கள் விருதை லங்காதீப பத்திரிகை தொடர்ச்சியாக 20 ஆவது முறையாகவும் வென்றுள்ளது.
இலங்கை நுகர்வோரின் விருப்பத்திற்கு இணங்க மாத்திரம் வர்த்தக நாமங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் 'ஸ்லிம் காண்டார்' மக்கள் விருது வழங்கும் விழா ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்ச் இம்பீரியலில் (Monarch Imperial) நடைபெற்றது.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) உபதலைவர் (கல்வி) பேராசிரியர் ஜயந்த டி.என். தேவசிறி அவர்களிடமிருந்து, ஞாயிறு லங்காதீபவின் பிரதம ஆசிரியர் காஞ்சன தசநாயக்க மற்றும் தினசரி லங்காதீபவின் பிரதம ஆசிரியர் அஜந்த குமார அகலகொட ஆகியோர் இவ்விருதினை பெற்றுக்கொண்டனர்.
விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஜனக ரத்னகுமார, சிரேஷ்ட விளம்பர ஆலோசகர் தர்ஷன டி சில்வா, விளம்பர வடிவமைப்பு மேலாளர் திவங்க சில்வா, விநியோகப் பிரிவு பிரதானி ரஞ்சித் ரூபசிங்க, சிரேஷ்ட அச்சு மேலாளர் நிஹால் குணரத்ன, வர்த்தக மேலாளர்களான சுராஜ் பத்திரண, லசந்த அபேவர்தன மற்றும் விளம்பர ஆலோசகர் திஸ்ஸ குடாதிஹி ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்."

3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago