2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

தந்தையின் பணியை முன்னெடுப்பேன்: ஹிருணிக்கா பிரேமச்சந்திர

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது தந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தப்போவதாகவும் அவரின் சேவைகளை முன்னெடுக்கப்போவதாகவும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷமன் பிரேமச்சந்திராவின் மகள் ஹிருணிக்கா பிரேமச்சந்திர நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தனது தந்தைக்கு நீதி கோரும் தனது போராட்டத்தில் கொலன்னாவை மக்களும் இணைய வேண்டுமென பாரத லக்ஷமன் பிரேமச்சந்திராவின் இறுதிக்கிரியை நிகழ்வில் பேசும்போது உணர்ச்சி மேலிட அவர் அழைப்பு விடுத்தார்.

பயப்படாத, நேர்மையான தனது தந்தை இவ்வாறான கொடூர முடிவுக்கு ஆளாக வேண்டுமாவெனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

அவர் அந்த தேர்தல் வன்முறைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட ஏனையோருக்கும் அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, மறைந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் மகன் ரந்திவப் பிரேமச்சந்திர தெரிவிக்கையில்,

'தனது தந்தை உயிரோடு இருந்ததுபோலவே கொலன்னாவை மக்களுக்கு எமது கதவு எப்போதும் திறந்திருக்கும்' உங்களுக்கு தேவையானபோதெல்லாம் உதவி செய்ய நாம் உங்களோடு இருப்போம் என்றார்.(Yohan Perera) 


  Comments - 0

 • asker Thursday, 13 October 2011 04:37 PM

  எங்களுக்கு தெரியும் நீங்கள் நல்வர்கள் என்று. நாமும் உங்களுடன் எப்பவும் இருப்போம். சிலருக்கு உங்களை பற்றி சரியாக தெரியாமல் பல கமெண்ட்ஸ்களை சொல்லுறார்கள் உங்களது பனி தொடர எம் வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  hamza Thursday, 13 October 2011 04:57 PM

  உங்கள் பணி தொடரட்டும்,
  Begining is the most important part of the work : PLATO.

  Reply : 0       0

  KURU Friday, 14 October 2011 12:52 AM

  சண்டியனுக்கு சாவு சந்தி இல்.............

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .