2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

'பொதுநலவாய போட்டியை நடத்த முயற்சிப்பதற்கே தைரியம் வேண்டும்: இலங்கை பாராட்டுக்குரிய நாடு'

Menaka Mookandi   / 2011 நவம்பர் 17 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'பொதுநலவாய போட்டிகளை நடத்துவதென்பது மிகப்பெரிய விடயம். அப்போட்டிகளை நடத்துவதற்கான போட்டியில் களமிறங்குவதற்கே தைரியம் அதிகம் தேவை. அந்த தைரியம் இலங்கைக்கு அதிகமாகவே காணப்படுகிறது.

இதனால் தோல்வியைக் கண்டு நாம் மனம் தளரவில்லை' என்று ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்இ 'இவ்வாறான சர்வதேசப் போட்டிகளை நடத்தியதன் மூலமாகவே பல நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாறின. மூன்று தசாப்த கால யுத்தத்திலிருந்து விடுபட்டுள்ள இலங்கை தற்போது அபிவிருத்திப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பொதுநலவாயப் போட்டிகளை நடத்துவதன் மூலம் எமது நாடும் அபிவிருத்தியின் உச்சத்தை எட்டும் என்று எதிர்ப்பார்த்தோம். எமது முயற்சி பயனளிக்கவில்லை.

அதற்காக நாம் தோல்வியடையவில்லை. இவ்வாறானதொரு முயற்சியில் களமிறங்கியதே பெரிய விடயம். இதற்காக இலங்கை பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றும் ஐபா சர்வதேச விருது விழா போன்றவற்றை இலங்கையில் நடத்தியதற்காக இலங்கை நட்டத்தை எதிர்நோக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை.

நாம் ஒரு விடயத்துக்காக செய்யும் செலவுகளுக்கான பிரதிபலனை பணமாக எதிர்ப்பார்த்தால் மாத்திரமே அது நட்டமாகக் கருதப்படும். மாறாக உலக அளவில் கிடைக்கும் பிரசாரம், உலகப் பார்வை, வரவேற்பு உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொள்ளும் பட்சத்தில் அது நட்டமாகக் கருதப்பட மாட்டாது. சர்வதேச கிரிக்கெட் போட்டியைப் பொருத்தவரையில் அந்த உலகப் பார்வை எமது நாட்டுக்கு கிடைத்தது. அது தவிர இப்போட்டியினை நடத்தியதற்காக ஐ.சி.சி.யிடமிருந்து எமக்கு இன்னும் பணம் கிடைக்கவேண்டியுள்ளது.

இதேவேளை, ஐபா விருது விழாவினை நடத்தியதற்காக சர்வதேச பிரசாரமும் வரவேற்பும் இலங்கைக்கு நிறையவே கிடைத்துள்ளன. இதனால் இலங்கை பாரியளவில் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்துள்ளது. இவற்றைக் கொண்டு குறித்த நிகழ்ச்சிகளை நடத்தியதால் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுவதில் அர்த்தம் இல்லை' என்றார். (M.M)


  Comments - 0

 • Jay Friday, 18 November 2011 01:34 AM

  மீசை மற்றும் தாடியிலும் மண் ஒட்டவில்லை!

  Reply : 0       0

  Pottuvilan Friday, 18 November 2011 02:14 AM

  ஓம் ஓம் நாங்க இருகிறோம் வரி கட்ட. நீங்க நல்லா நடத்துங்க.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X