2025 மே 23, வெள்ளிக்கிழமை

'செக்ஸ்' தேடுவதில் இலங்கை முதலிடம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்தளங்களில் 'கூகுள்' வலைத்தளத்தில் ´செக்ஸ்´ (பாலியல்) எனும் சொல்லை அதிகம் தேடும் நாடுகளின் பட்டியலில் 2012 ஆம் ஆண்டு இலங்கை முதலிடத்தை பிடித்துக்கொண்டுள்ளது.

'கூகுள் போக்குகள்' என்ற ஒரு பொது வலைத்தளம் ஒன்று நடத்திய ஆய்விலேயே இத்தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதிவரை நடத்தப்பட்டுள்ளது.

கூகுள் வலைத்தளத்தில் 'செக்ஸ்' என்ற சொல்லை அதிகமாக தேடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா  இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. 3ஆம் இடத்தில் பப்புவா நியூகினி தீவுகளும் எத்தியோப்பியா நான்காம் இடத்திலும், பாகிஸ்தான் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன.

ஆறாம் இடத்தில் பங்களாதேஷூம், வியட்நாம் 7ஆம் இடத்திலும் நேபாளம் எட்டாம் இடத்திலும் இருக்கின்றன.வறுமை கூடிய நாடுகளில் ஒன்றான சோமாலியா ஒன்பதாம் இடத்திலும் கம்போடியா பத்தாம் இடத்திலும் உள்ளன.

இலங்கையை பொறுத்தவரையில் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதியிலிருந்து  21ஆம் திகதி வரையும் டிசம்பர்  23 ஆம் திகதியிலிருந்து டிசம்பர்  26ஆம் திகதிவரையும் 'செக்ஸ்' என்ற சொல் இணையத்தளத்தில் கூடுதலாக தேடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் ஒக்டோபர் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரையும் நவம்பர் 11 ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதிவரையும்   இந்தியாவில் கூடுதலானோர் அந்த சொல்லை தேடிகொண்டிருந்தார்கள்.

இந்தியாவில் நகரங்களின் அடிப்படையில் பார்த்தால்  'செக்ஸ்'  என்ற சொல்லை தேடியவர்கள் இருக்கின்ற நகரங்களில் பெங்களூர்   அட்டவணையில் முதலிடத்தை வகிக்கிறது.

பெங்களூர் முதலிடத்திலும் , சென்னை, புனே புது டில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் முதல் 5 இடங்களுக்குள்ளும் இடம்பிடித்துக்கொண்டன.


'செக்ஸ்' சொல்லை தேடுவோர் இருக்கும் முதல் 10 நாடுகள்

1. இலங்கை.
2. இந்தியா.
3. பப்புவா நியூ கினி.
4. எத்தியோப்பியா.
5. பாகிஸ்தான்.
6. பங்களாதேஷ்.
7. வியட்நாம்.
8. நேபாளம்.
9. சோமாலியா.
10. கம்போடியா.

பயன்படுத்திய முதல் 10 சொற்கள்

1. இலவச செக்ஸ்.
2. செக்ஸ் வீடியோ.
3. செக்ஸ் வீடியோக்கள்.
4. ஆபாச செக்ஸ்.
5. ஆபாசம்.
6. இந்திய செக்ஸ்.
7. ஹாட் செக்ஸ்.
8. பாலியல்.
9. செக்ஸ் கதைகள்.
10. பாலியல் பெண்.

முதல் 10 நகரங்கள்

1. பெங்களூர்.
2. சென்னை.
3. புனே.
4. புது டில்லி.
5. கொல்கத்தா.
6. லாகூர்.
7. சண்டிகர்.
8. மும்பை.
9. தான் போ ஹு ச்சீ மின்
10. ஹனோய்.


You May Also Like

  Comments - 0

  • AJ Thursday, 27 December 2012 06:36 AM

    வரிசையாக வந்துட்டாங்க

    Reply : 0       0

    ikmsm Thursday, 27 December 2012 06:38 AM

    நைட் இன்டெனெட் டிஸ்கொன்ட் பகேஜ் என்று எல்லா டெலிபோன் கம்பனிகளும் வழங்கியிருப்பது இதற்குத்தான். இவர்கள்தான் இதற்கு வழிகாட்டிகள். அவங்க இவங்களுகளை குற்றம்சொல்ல முன்பு மக்களை சீரழிவின் பக்கம் கொண்டுசெல்லும் இந்த டெலிபோன்காரனுகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.

    Reply : 1       2

    zamroodh Thursday, 27 December 2012 06:55 AM

    sex ஐ தேடிய நாடுகளை ஆராய்ந்து list போட்டிருக்கிறார்கள், அதை ஊக்குவித்த நாடுகள், அந்த அசிங்கமான வீடியோக்களை, போட்டோக்களை, கதைகளை பதிந்த நாடுகளின் பட்டியல் எங்கே? எந்த நாடுகள் முதல் 10 இடங்களை பெற்றுள்ளன என்று ஆராய்ந்து list போடமாட்டாங்களா? அப்படி அசிங்கமானவர்கள், அசிங்கத்தை ஊக்குவிப்பவர்கள் இந்த இந்த நாட்டில்தான் உள்ளார்கள் என்று வெளியிட்டால், அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு கேவலமென்று பயப்படுகின்றார்களோ?!

    Reply : 0       0

    Saravana Thursday, 27 December 2012 11:29 AM

    ஆணா பெண்ணான்னு பாக்க கூகிலுக்குப் போய் தேடனுமோ?

    Reply : 1       0

    xlntgson Friday, 28 December 2012 07:10 AM

    What sex, homo or hetero?

    Reply : 10       2

    Maran Friday, 28 December 2012 12:04 PM

    மத்த நாட்டுக்காரங்க எல்லாம் அதெல்லாம் பாத்து முடிச்சு அவக்க அதுல ஒஸ்காரெல்லாம் எப்போவோ வாங்கிட்டாங்க. நம்ம இலங்கையில் இப்பத்தான் எல்லாருக்கும் இன்டர்நெட் மலிவா தாராளமா கெடைக்குது. அதான் ரெக்கோட் வெச்சிருக்காங்க. இன்னும் கொஞ்ச காலத்துல இதெல்லாம் சர்வ சாதாரணமா போயிடும். இலங்கையும் லிஸ்டுல பின்னாடி போயிடும்.

    Reply : 1       4


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X