2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆஸி.பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு செல்லும் அவுஸ்திரேலிய பிரஜைகள் பாதுகாப்புடன் செயற்படுமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இலங்கையில் பாதுகாப்பு நிலைகள் மோசமாக காணப்படுவுதாகவும் தமது பிரஜைகள் அங்கு கவனமாக செயற்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளை, இலங்கையில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துகொள்வதுடன், இலங்கையில்  டெங்கு உட்பட நுளம்புகளினால் பரவக்கூடிய நோய்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கைக்கு செல்லும் அவுஸ்திரேலிய பிரஜைகள் அனைவரும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சில் கட்டாயமாக தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .