Kanagaraj / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான குழுவினரே அவரை பார்வையிட்டதுடன் நலன்விசாரித்துள்ளனர்.
எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் செனவிரத்ன, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, லக்ஷ்மன் வசந்த பெரேரா மற்றும் லலித் திஸாநாயக்க ஆகியோரே அவரை பார்வையிட்டுள்ளனர்.
போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
1 hours ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
23 Nov 2025
23 Nov 2025