2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

சசி வீரவன்ச குறித்த விசாரணைகள் முடிவு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச, தனது கடவுச் சீட்டுக்கு பொய்யான தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான இரகசிய பொலிஸாரின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

சசியின் சாதாரண கடவுச் சீட்டில் பிறந்த வருடமாக 1967 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இராஜதந்திர கடவுச்சீட்டில் பிறந்த வருடமாக 1971 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இவ்விரு கடவுச் சீட்டுக்களிலும் மாறுபட்ட பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.

இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும்  பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .