Thipaan / 2015 ஜூன் 20 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவெலயையும் கடவத்தையையும் இணைக்கும் கொழும்பு புறநகர் அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது கட்ட திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளதாக திட்ட பணிப்பாளர் திருமதி ரீ.எஸ். எச். அபேவிக்ரம, நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கொழும்பின் புறநகர் அதிவேக நெடுஞ்சாலையை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் கட்டங்களில், கொட்டாவையிலிருந்து கடுவெல வரையான முதற்கட்டம் முன்னைய அரசாங்கத்தால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது கட்டம் கடுவெலயிலிருந்து கடவத்தை வரையானதாகும். மூன்றாவது கட்டம் கடவத்தையிலிருந்து கெரவலபிட்டிய வரையானதாகும்.
புறநகர் அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டமான கடுவெல- கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நேற்று திறந்து வைக்கப்படவிருந்ததாகவும் அது ஜூலை மாத நடுப்பகுதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாகவும் திட்டப் பணிப்பாளர் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago