2025 மே 16, வெள்ளிக்கிழமை

வீட்டிலிருந்து எலும்புகூடு மீட்பு

Kanagaraj   / 2015 ஜூன் 22 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரிய வெலிக்கடை சில்வா மாவத்தையில் உள்ள வீடொன்றிலிருந்து மனித எலும்புகூடொன்று மீட்கப்பட்டுள்ளது.

55 வயதான நபரொருவரின் எலும்புகூடொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.  வீட்டில் தனிமையில் வசித்துவந்த குறித்த நபர்தொடர்பில் நீண்ட நாட்களாக தகவல் இன்மையால் அவருடைய உறவினர்கள் வீட்டுக்கு தேடிவந்துள்ளனர்.

உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டுக்குள் எலும்புகூடு கிடந்துள்ளமையை கண்டு, பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

எலும்புகூடுக்கு சொந்தமானவர், வீட்டின் உரிமையாளரா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .