2025 மே 16, வெள்ளிக்கிழமை

புலம்பெயர்ந்தோர் விழா என்னுடைய விதந்துரை: மங்கள

Kanagaraj   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலம்பெயர்ந்தோர் விழா தொடர்பில் அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதி ஒருவரினால் தெரிவிக்கப்பட்ட திரிபுபடுத்திய வாசகங்களை நான் அவதானித்தேன். முழுமையாக பிழையானவையென்பதை நான் வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன். புலம்பெயர்ந்தோர் விழாவென்பது என்னால் ஆரம்பிக்கப்பட்டதொரு கருத்தாக்கமாகும், அன்றி வேறெவராலும் விதந்துரைக்கப்பட்டதல்ல என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புலம்பெயர் விழா நடத்தினால் 3'½ ' மில்லியன் அமெரிக்க டொலர்கள் எங்களுக்கு கிடைப்பதாகவும், இது திரும்பவும் இலங்கையில் ஈழத்தை ஆரம்பிப்பதற்கான ஒரு முயற்சி எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
இந்த இரண்டு கூற்றுக்களும் முழுமையாக பிழையானவையென்பதை நான் வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன். புலம்பெயர்ந்தோர் விழாவென்பது என்னால் ஆரம்பிக்கப்பட்டதொரு கருத்தாக்கமாகும், அன்றி வேறெவராலும் விதந்துரைக்கப்பட்டதல்ல.

வெளியேற்றப்பட்டவர்களை தாய்நாட்டுக்கு திரும்பவும் கொண்டுவருவதற்கு விசேடமாக அயர்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களை விழாக்கால நிலைமைகளில், அபிவிருத்தி நடைமுறையில் ஈடுபடுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையை நாம் அவதானித்துள்ளோம். 

இதைப்போலவே, அநேக இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அறிவையும், அனுபவத்தையும் பெற்றுள்ளனர். சில மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து இறங்கியுள்ள கொம்புகளுடனான கடற்கொள்ளையர்கள், காடையர்கள் அல்லது பயங்கரவாதிகள் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். 

புலம்பெயர்ந்த இலங்கையர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கிய அல்லது ஏதேனும் பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவுஸ்திரேலியா, பறங்கியர்களைக் கொண்ட புலம்பெயர்ந்தவர்களின் பாரியதொரு சமூகத்தைக் கொண்டுள்ளது. 

உண்மையிலேயே அனேக இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு நாடுகளில் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். 

நாசா போன்ற அமைப்புகளில் சிறந்த பதவிகளை வகிக்கின்ற இலங்கையர்களாகிய விஞ்ஞானிகள் இருக்கின்றனர் என்பதைப் பற்றி நாம் அறிந்த நிலையிலுள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .