2025 மே 16, வெள்ளிக்கிழமை

இராணுவ நூதனசாலையில் மாயமான ஆயுதஙகள் தொடர்பில் விசாரணை

George   / 2015 ஜூன் 24 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியாத்தலாவை இராணுவ முகாம் நூதனசாலையிலிருந்து ஆயுதங்கள் காணாமல் போனமை தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை இராணுவம், இன்று புதன்கிழமை(24) தெரிவித்தது.

இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இராணுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர கூறினார்.

22 எம் எம் ரைபிள், உள்நாட்டு உற்பத்தி துப்பாக்கிகள் மற்றும் ஒரு பிஸ்டல் என்பன சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய தினங்களில் காணாமல் போனதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் தியத்தலாவை பொலிஸாரும் விசாரணை நடத்துவதாக பிரிகேடியர் ஜயவீர கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .