Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2015 ஜூன் 24 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்
நாட்டில் பயஙகரவாதத்துக்கு மீண்டும் இடமளிக்க போவதில்லை எனவும். புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் வட., கிழக்கில் இதுவரை எந்தவொரு இராணுவ முகாம்களும் அகற்றப்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் புதன்கிழமை(24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவர் இதனை கூறினார்.
இராணுவ வீரர்களுக்கு வரப்பிரசாத அட்டைகளை வழங்குவதற்கு நாட்டிலுள்ள முக்கிய நிறுவனங்களின் ஒத்துழைப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வொன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், ஜீலை மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இராணுவ வீரர்களுக்கு வரப்பிரசாத அட்டைகளை வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த வரப்பிரசாத அட்டை ஊடாக இராணுவ வீரர்களுக்கு அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
அத்துடன், தனியார் நிறுவனங்களிலும் இராணு வீரர்களின் வரப்பிரசாத அட்டைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வரப்பிரசாத அட்டைகள் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும் இது தொடர்பில் யாருக்கும் தெளிவில்லாத நிலையில் அதனை பயன்படுத்தமுடியாத நிலைய ஏற்பட்டது.
எனவே அந்நிலையை மாற்றிட நாட்டிலுள்ள முக்கிய நிறுவனங்களின் ஒத்துழைப்பின் ஊடாக இராணுவ வீரர்களுக்கு வரபிரசாதங்களை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.
இதேவேளை, நாம் எந்தவொரு நிறுவனங்களையும் பலத்தை பிரயோகித்து இந்த திட்டத்துக்கு இணங்குமாறு செய்யவில்லை இராணு வீரர்களை கௌரவப்படுத்த இந்நிறுவனங்கள் தமது ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளன என்றார்.
இராணு வீரர்கள் தமது உயிரை அரப்பணித்து பெற்றுக்கொடுத்த நாட்டின் பாதுகாப்பை சீர்குழைக்க விடமாட்டோம். புதிய அரசாங்கம் பதவியேற்ற பினனர் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாக சில பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்தது. இது முற்றிலும் தவறான செய்தி.
நாம் எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றவில்லை. நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago