2025 மே 16, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கான 9 வெளிநாட்டுத் தூதுவர்கள் அறிவிப்பு

Thipaan   / 2015 ஜூன் 24 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஒன்பது புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் விவரங்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

உயர் பதவிகளுக்கான செயற்குழுவின் அங்கிகாரத்தை இவர்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள அவ்வமைச்சு, இவர்கள் விரைவில் தங்கள் பதவிகளை விரைவில் ஏற்றுக் கொள்ளவுள்ளார்கள் எனவும் அறிவித்துள்ளது.

இதுவரை உறுதிசெய்யப்பட்டு, அனுமதிகளைப் பெற்றுள்ளவர்களின் விவரங்களை மட்டுமே வெளியிடும் ஆணையைப் பெற்றுள்ளதால், ஏனையோரின் விவரங்கள் தொடர்ந்தும் வெளியிடப்படும் எனவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார்.

உறுதிப்படுத்தப்பட்டுள்ள தூதுவர்களின் விவரங்களும், அவர்கள் பணியாற்றவுள்ள நாடுகளும்:

ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜெகத் ஜெகசூரிய - பிரேசில்

வை.கே. றோஹண்அஜித் - ஈரான்

பி. செல்வராஜ் - இஸ்ரேல்

ஏ.எம்.ஜே.சதீஹ் - நெதர்லாந்து

ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஆர்.எம்.டி. ரத்னாயக்க - பாகிஸ்தான்

டபிள்யூ.எஃப். கருணாதாச - கட்டார்

திருமதி. ஆர்.டி.ராஜபக்ஷ - ஸ்வீடன்

திருமதி. ஷெனுகா செனவிரத்ன - தாய்லாந்து

திருமதி. எஸ்.எச்.யு. திசாநாயக்க - வியட்னாம்

 


You May Also Like

  Comments - 0

  • A.S.RASHIYAMANY Wednesday, 24 June 2015 05:17 PM

    Mr.Selvaraj - your steady progress in the Ministry of Foreign affairs is commendable. You are now rewarded with a Counselor post to Israel. CONGRATULATIONS !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .